Author Topic: துண்டு மீன் குழம்பு  (Read 380 times)

Offline kanmani

துண்டு மீன் குழம்பு
« on: November 18, 2013, 12:16:45 PM »

துண்டு மீன் குழம்பு
மாற்றம் செய்த நேரம்:2/6/2013 5:04:34 PMClean the fish, cut into pieces, salt to wash it well. After onions, tomatoes and cut to clean water.
17:04:34
Wednesday
2013-02-06
Clean the fish, cut into pieces, salt to wash it well. After onions, tomatoes and cut to clean water.


EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS

என்னென்ன தேவை?

மீன் - 1 கிலோ
மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகாய்தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகுதூள் - 1/2 டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு
தக்காளி - 4
பூண்டு - 5பல்
கடுகு - 1 டீ ஸ்பூன்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?

மீனை சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டி, உப்பு போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக  நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாயககன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு  வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். பின்னர் வெந்தயம் சிவந்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பெருங்காயம்,  மஞ்சள்தூள் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். புளி நன்றாக  கொதித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு மிகவும் தண்ணியாகவோ, கெட்டியாகவோ  இல்லாமல் இருக்கும்போது சுத்தம் செய்து வைத்துள்ள மீனைப்போடவும். மீனைப்போட்டு ஐந்து நிமிடங்கள் மட்டும் கொதிக்கவிடவும். அதிக நேரம்  கொதிக்கவிட்டால் மீன் துண்டுகள் உதிர்ந்துவிடும்.