என்னென்ன தேவை?
மீன் - 1/2 கிலோ
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
அரைக்க
தேங்காய் துருவல்&3 தேக்கரண்டி
நறுக்கிய சிறிய வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 4 பல்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பொடி
மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எப்படி செய்வது?
புளியை சிறிதளவு தண்ணீர் கலந்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.. பொடியாக்கி வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள கலவையுடன் பொடிகளை சேர்த்து அதனுடன் புளி தண்ணீர், போதுமான அளவு உப்பு கலந்து ஒவ்வொரு மீனிலும் தடவி அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மீன்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்தெடுக்கவும்..