Author Topic: ~ மலாய் பிரெட் டோஸ்ட் ~  (Read 397 times)

Offline MysteRy

~ மலாய் பிரெட் டோஸ்ட் ~
« on: November 14, 2013, 08:35:52 PM »
மலாய் பிரெட் டோஸ்ட்



தேவையானவை:
ரொட்டித் துண்டுகள் - 8, பால் - 3 கப் (சுண்டக் காய்ச்சவும்), கோவா - முக்கால் கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
ரொட்டித் துண்டுகளை முக்கோண வடிவில் வெட்டி இருபுறமும் நெய் தடவி டோஸ்ட் செய்யவும். ஒரு பாத்திரத்தில் கோவாவுடன் சர்க்கரை சேர்த்து, நன்றாக சுண்டும் வரை கிளறவும். டோஸ்ட் செய்த ரொட்டித் துண்டுகளை அதில் மெதுவாகப் போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும். பிறகு ஏலக்காய்த்தூளைப் போடவும்.
ரொட்டித் துண்டுகளை மெதுவாக பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு தட்டில் பரப்பவும். சுண்டக் காய்ச்சிய பாலை துண்டுகளின் மேல் விட்டு முந்திரிப்பருப்பை தூவி பரிமாறவும்.