Author Topic: காரமான சிந்தி தால்  (Read 492 times)

Offline kanmani

காரமான சிந்தி தால்
« on: November 11, 2013, 09:21:27 AM »
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3 (நீளமாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் த
ண்ணீர் - 3 கப்

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் அதனை குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் விசிலானது போனதும் குக்கரை திறந்து, பருப்பை கடைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அதனை குக்கரில் உள்ள பருப்பில் போட்டு கிளறி, மாங்காய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு வைக்க வேண்டும்.

அடுத்து அதே வாணலியை அடுப்பில், மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், எஞ்சிய சீரகம், கறிவேப்பிலை, பாதி வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் தாளித்து, பின் பருப்பில் சேர்த்து கிளறி விட வேண்டும். இப்போது சுவையான சிந்தி தால் ரெசிபி ரெடி!!!

 இதன் மேல் மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறலாம்.