Author Topic: நெத்திலி வறுவல்  (Read 455 times)

Offline kanmani

நெத்திலி வறுவல்
« on: November 11, 2013, 09:10:20 AM »


    நெத்திலி மீன் - கால் கிலோ
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு
    எலுமிச்சை - பாதி
    முட்டை - ஒன்று (விரும்பினால்)
    அரிசி மாவு / கார்ன் மாவு / ரவை - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

 

 
   

நெத்திலி மீனைச் சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும். எலுமிச்சை சாறுடன் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து வைக்கவும்.
   

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும்.
   

பிறகு மீனைச் சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
   

ஒரு தட்டில் மாவுடன் சிறிது உப்பு கலந்து, அதில் மீனை நன்றாக பிரட்டி வைக்கவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மீனை போட்டு வறுத்து எடுக்கவும்.
   

சூடான எண்ணெயில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையைச் சேர்க்கவும். சுவையான நெத்திலி வறுவல் தயார்.

 

இதில் மாவு / ரவை விரும்பினால் சேர்க்கலாம். சேர்க்காமலும் வறுக்கலாம். முட்டை சேர்ப்பதும் உங்கள் விருப்பம் தான். வெறும் தூள் வகைகளை எலுமிச்சையில் சேர்த்து பிரட்டி ஊறவிட்டுச் செய்தாலும் நன்றாக இருக்கும். முட்டை சேர்க்காமல் மாவில் பிரட்டியும் வறுக்கலாம்.