Author Topic: செயற்கை இரத்தம்  (Read 6434 times)

Offline Global Angel

செயற்கை இரத்தம்
« on: November 18, 2011, 06:11:36 PM »
செயற்கை இரத்தம்


வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நோய்களும், விபத்துகளும் அதிகரித்து வருவதைப் போலவே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் வளர்ந்து வருகின்றன.
 
அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்துகளின் போதும் இரத்தம் அதிக அளவில் தேவைப்படும்போது குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இரத்தம் போதிய அளவில் கிடைப்பதில்லை.
 
இந்தக் குறையினை நிவர்த்தி செய்ய ஸ்டெம்செல்களில் இருந்து செயற்கை இரத்தத்தை உருவாக்கிச் சாதனை படைத்துள் ளனர் இங்கிலாந்து நாட்டின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
 
இவர்கள் கண்டுபிடித்திருக்கும் செயற்கை இரத்தத்தில் எந்தவிதமான தொற்றுநோய்க் கிருமிகளும் இருக்காது என்பதால் யாருக்கு வேண்டுமானாலும் எவ்விதப் பயமுமின்றிச் செலுத்தலாம்.
 
இன்னும் 2 ஆண்டுகளில் மனிதனுக்குச் சோதனையின் அடிப்படையில் செலுத்தப்பட இருக்கும் இந்தச் செயற்கை இரத்தம் பயன்பாட்டிற்கு வருவதற்கு 10 ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்