Author Topic: ~ காலை சிற்றுண்டி: ரவா கிச்சடி!தேங்காய் சட்னி!! ~  (Read 419 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
காலை சிற்றுண்டி: ரவா கிச்சடி

தேவையானவை:
ரவை - ஒரு டம்ளர், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 8 பல், எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, தண்ணீர் - 2 டம்ளர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அடுப்பைப் பற்ற வைத்து வாணலியில் ரவையை லேசாக வறுத்து, தனியாக வையுங்கள். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி... பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து... நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பூண்டு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதில், இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது... ரவையை அதில் தூவி கிளறி, அடுப்பை சிம்மில் வைத்தால்... தளதளவென வெந்து, சற்று நேரத்தில் உதிரி உதிரியாக ரவா கிச்சடி ரெடி!

இதற்கு பெஸ்ட் சைட் டிஷ் தேங்காய் சட்னி.


தேங்காய் சட்னி

தேவையானவை:
தேங்காய் - கால் மூடி, பச்சை மிளகாய் - 2, பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பிலேற்றி சூடாக்கி, எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்து வைத்த தேங்காய் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கி இறக்குங்கள்.