Author Topic: மில்க் டொஃபி  (Read 444 times)

Offline kanmani

மில்க் டொஃபி
« on: November 06, 2013, 11:05:45 AM »


    கன்டென்ஸ்டு மில்க் - ஒரு டின் (சிறியது)
    சர்க்கரை - 200 கிராம்
    தண்ணீர் - மில்க் டின்னில் கால் வாசி
    பட்டர் - 2 தேக்கரண்டி
    ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி

 

 
   

ஒரு நாண் ஸ்டிக் கடாயில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
   

கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
   

படிப்படியாகக் கலவை நிறம் மாறி கெட்டியாகி வரும்போது கைவிடாமல் கிளறவும்.
   

சரியான பதம் வந்ததும் (கடாயில் ஒட்டாமல் கலவை பொங்கி வரும்போது) உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
   

கலவையை பட்டர் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி கத்தியால் விரும்பிய வடிவில் கீறிக்கொள்ளவும். ஆறியதும் துண்டுகளைப் பிரித்து எடுக்கவும்.
   

குழந்தைகள் விரும்பும் சுவையான மில்க் டொஃபி ரெடி.