Author Topic: ~ நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்..! ~  (Read 449 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226423
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்..!




நம் உடலைப் பேணிப் பாதுகாக்க முதலில் நாம் செய்ய வேண்டியது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதேயாகும். அதுதான் நம் உடலைப் பாதுகாக்கும் கவசமாக, அரணாக உள்ளது. அடுத்தபடி தான் உணவும், மருந்தும். உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தாலே பலவித நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆகவேதான் உணவே ம ருந்து என்று சொல்லி இருக்கிறார்கள்.
நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களைப் போல, நம்மை நோய் நொடியிலிருந்து பாதுகாப்பது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்தான். இந்த வெள்ளை அணுக்கள் தாம், உடலில் நோய் தாக்கும்போது, அதற்குக் காரணமான கிருமிகளை எதிர்த் துப் போராடும் ஆற்றல் மிக்கது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த ஒரு குறிப்பிட்ட உறுப்பிலும் தனியாகத் தோன்றுவதில் லை. நம் மூளை, ரத்தம், கல்லீரல், மண்ணீரல், எலும்பு, நிணநீர், ரத்தக் குழாய்கள், நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படும் போதுதான் நோய் எதிர்ப்பு நம் உடலில் வளருகிறது. இதில் ஏதாவது குறைபாடு ஏற்படும்போதுதான் நோய் உண்டாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது உடலில் சாதாரண காய்ச்சல் முதல், தொற்றுநோய், புற்றுநோய், சளித்தொந்தரவு, ஆஸ்து மா என்றெல்லாம் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்போது, நோயிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதற்கு ஆதாரமானது நல்ல, சமச்சீரான, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவாகும்.

மூலிகைகள் பல, அத்தனையையும் நாம் பயன்படுத்த முடியாது. இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமே இந்த மூலிகைகள்தான். சித்தர்கள் இதைக் கண்டறிந்து, நாம் நோய் நீங்கி நெடுங்காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பலவித மூலிகைகளையும், அதன் பலன்களையும், அதனைப் பயன்படுத்தும் விதத்தையும் நமக்குக் கூறியுள்ளனர். இந்த மூலிகைகளில் சிலவற்றையாவது நாம் அன்றாடம்
அருந்துவதால் நோய் நீங்கி நாம் நலமுடன் வாழலாம். இதனை ஆதாரமாகக் கொண்டே நம் ஆலயங்களில் பல தலவிருக்ஷங்கள் நமது ஆலய வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த மூலிகைப் பிரசாதங்களை அருந்தும் போது, மூலிகைகளின் மருத்துவ குணத்தாலும், இறையருளாலும் நமது நோய் நீங்குகிறது. இதனைத் தெய்வீக மூலிகைகள் என்கிறோம்.

தெய்வீக மூலிகைகளாக மாரியம்மன் கோயில்களில் பயன்படுத்தப்படும் வேப்பிலை, சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி, விநாயகருக்கு உரிய அறுகம்புல், பிரம்மாவுக்கு உரிய அத்தி இலை, கங்கைக்குரிய மாவிலை அடங்கும். மற்றும் அரசனிலை, ஆலயிலை கரிசலாங்கண்ணி, தூதுவளை, கண்டங்கத்திரி, நெல்லி, தும்பைப்பூ, குப்பைமேனி, கீழாநெல்லி, ஜாதிக்காய், தான்றிக்காய், அதிமதுரம் ஆகியவை. இவற்றை சிறிது, சிறிதாக பொடித்து வெயிலில் காயவைத்து,உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இரண்டு தேக்கரண்டி தண் ணீரில் கலந்து அருந்த நோய் குணமாகும்.

இந்த மூலிகைகளில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. மேலும் புற்றுநோய் எதிர்ப்பு பாக்டீரியாக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடெ ண்டுகள், ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி ஃபங்கஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவன.

சமச்சீரான, சத்துள்ள வைட்டமின்கள், தாது உப்புகள், கொழுப்பு, இரும்புச் சத்து, புரதம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற உடல்நல ஊக்கிகள் கொண்ட உணவு வகைகள் நோயைக் குணப்படுத்தும். இவற்றை வகை அறிந்து உண்பதால் பலன் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சில முக்கியமான உணவுகள்:

கேரட்: இது எல்லா நோய்களையும் குணப்படுத்தும். கேரட்டில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், பீட்டா கரோடின் என்ற சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்திகள் காரணமாக வைரஸ், பாக்டீரியா கிருமிகளை ஒழித்து, நோய் எதிர்ப்புச் செல்களை உரு வாக்கி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து, நோயிலிருந்து நாம் விடுதலை பெற உதவுகின்றன.

தினமும் 5 முதல் 10 கேரட்டுகளை பச்சையாகவே சாப்பிட்டு வர பலன் கிடைக்கும். இதனால் 30 மி.கி. முதல் 60 மி.கி. வரை நமக்கு கரோட்டின் சத்து கிடைக்கிறது. இவை நமது உடல் ஆரோக்கியத்துக்குப் போதுமானது.கேரட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பீட்டா கரோட்டின் அளவு குறைந்து நோய் நம்மைத் தாக்குகிறது. கேரட் மற்றும் மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, வெண்பூசணி, தர்பூசணி, கீரை வகைகள், வெள்ளரிப்பிஞ்சு, தயிர் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத பால் எடுத்துக் கொள்ளலாம்.