Author Topic: ~ சுக்குபேரீச்சை சாண்ட்விச் ~  (Read 395 times)

Online MysteRy

சுக்குபேரீச்சை சாண்ட்விச்



தேவையானவை:
துண்டு துண்டாக வெட்டிய பேரீச்சம்பழங்கள், சுக்குப்பொடி மற்றும் ஏலக்காய்த்தூள், வெண்ணெய், பிரெட் துண்டுகள்.

செய்முறை:
 நறுக்கிய பேரீச்சம்பழத்தை, சுக்கு மற்றும் ஏலக்காய்த்தூளுடன் நன்கு தோய்த்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பிரெட் துண்டை எடுத்து அதில் வெண்ணெய் தடவி, அதில் பேரீச்சம் பழக் கலவையை வைத்து, அதன் மேல் மற்றொரு பிரெட் துண்டால் மூடி, டோஸ்ட் செய்ய வேண்டும். சில குழந்தைகள் பேரீச்சம்பழத்தை அப்படியே உண்ண விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு இந்த முறையில் கொடுக்கலாம்.

பலன்கள்:
சுக்கு இருமல், சளி, கெட்ட கொழுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன் தரும்.
 பேரீச்சையில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, வளரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது.