Author Topic: ~ ஐங்காயப்பொடி (அங்காயப்பொடி) ~  (Read 714 times)

Offline MysteRy

ஐங்காயப்பொடி (அங்காயப்பொடி)



தேவையானவை:
சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் - தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம், நெய் - தலா அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு - 3 கிராம்.

செய்முறை:
கடாயைக் காயவைத்து,  நெய் விட்டு, வற்றல்கள், வேப்பம்பூ, மிளகு, சீரகம், காயம் இவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியே போட்டு வாசம் வர வறுத்து, தட்டில் தனியாக வைக்கவும்.
வறுத்த பொருட்கள், இந்துப்பு சேர்த்து நன்கு பொடித்து, டப்பாவில் எடுத்துவைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்த அங்காயப்பொடியைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவேண்டியதுதான்.

பலன்கள்:
 செரிமானத்துக்கு உற்ற நண்பன், இந்தப் பொடி.
மாசுபட்ட தண்ணீர் அல்லது உணவினால், செரிமானம்  பாதிக்கப்பட்டு,  வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, இந்தப் பொடி கட்டுப்படுத்தும். 
 வயிறு தொடர்பான உபாதைகள் சரியாகும். இந்தப் பொடியைப் போட்டுச் சாப்பிட்டால், உடம்பு வலி, அசதி எல்லாம் பறந்துவிடும்.