என்னென்ன தேவை?
துருவிய கேரட் - 4 கப்,
பால் - ஒரு கப், சர்க்கரை/பனங்கற்கண்டு/வெல்லம் - அரை கப்,
தூளாக்கப்பட்ட முந்திரி/பாதாம்/பிஸ்தா - அரை கப்,
வெண்ணெய் (அ) நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கேரட்டை கழுவி சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது நெய் விட்டு சூடேற்றவும். இதில் கேரட்துருவலை இட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு பால் சேர்த்து மிதமான தீயில் கேரட்டை வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது வெல்லம் சேர்க்கவும். இது மீண்டும் தண்ணீராக நீர்த்துவிடும். இதை 5 முதல் 10 நிமிடம் வரை மிதமான தீயில் கிளறவும். தண்ணீர் முழுவதும் வற்றியபின் ஏலக்காய் தூள், முந்திரி அல்லது பாதாம் அல்லது பிஸ்தா ஏதாவதொரு பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து இறக்கவும். இதனை ஐஸ்கிரீமுடன் சேர்த்து அல்லது ப்ளெயினாக பரிமாறலாம்.