Author Topic: ~ மாதுளம் விதை துவையல் ~  (Read 440 times)

Online MysteRy

~ மாதுளம் விதை துவையல் ~
« on: October 30, 2013, 08:19:30 PM »
மாதுளம் விதை துவையல்



தேவையானவை:
மாதுளம் விதை - கால் கப், புளி - நெல்லிக்காய் அளவு, இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெல்லம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மாதுளம் விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்), புளி, இஞ்சி விழுது, பச்சை மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். புளிப்பும் இனிப்புமாக கலந்துகட்டி ருசிக்கும் இந்தத் துவையல். இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

மாதுளம் விதை துவையல்: வேர்க்கடலையை சிறிது வறுத்து அரைத்து சேர்த்தால் டேஸ்ட்டாக இருக்கும்.