மட்டன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 4
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - 4 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
பாதாம் தூள் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை, புதினா
எண்ணெய், உப்பு - தேவைக்கு
மட்டனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும். மிக்ஸியில் தக்காளியுடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை தாளித்து, வாசனை வந்தவுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் மொறு மொறுவென வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பாதாம் தூள் தவிர மற்ற தூள் வகைகளைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி விழுது, மட்டன் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் சேர்க்காமல் 4 விசில் வரும் வரை வேகவிட்டு, ஆவி அடங்கியதும் பாதாம் தூள், கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து 10 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து கிரேவி பதத்திற்கு வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
சுவையான டொமேட்டோ மட்டன் கிரேவி ரெடி.