Author Topic: ரிச் மால் புவா  (Read 573 times)

Offline kanmani

ரிச் மால் புவா
« on: October 26, 2013, 10:57:23 PM »
என்னென்ன தேவை?

மைதா - 250 கிராம்,
புளிப்பு இல்லாத தயிர் - 100 கிராம்.
பால் - 100 கிராம்.
2, 3 ஏலக்காய்,
நெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
சர்க்கரை - 250 கிராம்.
அலங்கரிக்க - ஐஸ்க்ரீம் 1 கப் பெரியது அல்லது 4 குலாப் ஜாமூன் அல்லது செர்ரி பழம்.
பிஸ்தா, பாதாம் தலா 6, குங்குமப்பூ சிறிது.
எப்படிச் செய்வது? 

மைதா, பால், தயிர், ஏலக்காய் தூள் யாவற்றையும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1 கப்  தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி பின் மைதா  கலவையில் இருந்து ஒரு குழிக்கரண்டி எடுத்து சூடான எண்ணெய் அல்லது நெய்யில் மெதுவாக வட்டமாக ஒவ்வொன்றாக ஊற்றவும். அது பொரிந்து  மேல் வரும்போது திருப்பி போட்டு பொன்னிறமாக எடுத்து சர்க்கரைப் பாவில் வைக்கவும். குங்குமப் பூவை 1 டீஸ்பூன் பாலில் கரைத்து மால் புவா  மேல் ஊற்றவும்.

குறிப்பு:  டிரை ஃபுரூட்ஸ் மற்றும் நட்ஸ் கொண்டு அலங்கரிக்கலாம். இதை அப்படியே சாப்பிடலாம். சிறிது கிரீம் சேர்த்து செர்ரி பழங்கள் வைக்கலாம்.  மால் புவா மேல் ஒரு கப் ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் ஒரு சிறிய குலாப் ஜாமூன் வைத்தும் பரிமாறலாம்.