முருங்கைக்காய் சூப்
என்னென்ன தேவை?
முருங்கைக்காய் - 20 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 2
மிளகு - 5 கிராம்
பட்டை - 1
கிராம்பு - 1
தேங்காய் பால் - 100 மி.லி
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படி செய்வது?
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மிளகை இடித்து பொடியாக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முருங்கைக்காய் வதக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். வாணலியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போட்டு வேக வைக்கவும். பருப்பு வேகவைத்ததும் அதில் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாகும்வரை கொதிக்கவிட வேண்டும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பட்டை, கிராம்பு போட்டு வதக்க வேண்டும். பின்னர், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் முருங்கைக்காய், பருப்பு கலவையுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரம் கழித்து தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரத்தில் வடிகட்டிய சூப் பரிமாறலாம்.