Author Topic: ~ வெல்ல தோப்பம் ~  (Read 462 times)

Online MysteRy

~ வெல்ல தோப்பம் ~
« on: October 22, 2013, 02:10:53 PM »
வெல்ல தோப்பம்



தேவையானவை:
புழுங்கலரிசி, பச்சரிசி - தலா அரை கிலோ, கடலைப்பருப்பு, மைதா மாவு - தலா 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் - ஒன்று, ஏலக்காய் - 5, வெல்லம் - 500 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, ரீஃபைண்ட் ஆயில், தூள் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் கிரைண்டரில் அரைக்கவும். மாவு ஓரளவுக்கு மசிந்த பின்னர்... துருவிய தேங்காய், ஏலக்காய், பொடித்த வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். 5 நிமிடத்துக்குப் பிறகு, மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். அதில் சமையல் சோடா, மைதா மாவு மற்றும் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர், அடுப்பில் கடாயை வைத்து, பாதி அளவுக்கு ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி சூடாக்கி,  ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றினால் வெந்து நன்றாக ஊதி, உப்பி மெதுவாக மேலே எழுந்து வரும். அதனை திருப்பி விடவும். இவ்வாறு ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவும்.
திருநெல்வேலி, காரைக்குடி ஸ்பெஷலான இந்த இனிப்பை 4 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.