Author Topic: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~  (Read 890 times)

Offline MysteRy

கேழ்வரகு இட்லி



செய்முறை:
 கேழ்வரகு, அரிசி, உளுந்து மூன்றையும் எட்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும்.  இதில் உப்பு சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும். 

மருத்துவப் பலன்கள்:
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் நல்லது. இதில் கால்சியம் சத்து அதிகம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

Offline MysteRy

சோளம்  தினை தக்காளி தோசை



செய்முறை:
 சோளம், தினை தலா ஒரு கப் எடுத்து, சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தோசைமாவுடன் கலந்து, எட்டு மணி நேரம் புளிக்கவிடவும்.  இதனுடன் நான்கு தக்காளியைப் பொடியாக நறுக்கி தேவையான அளவு சேர்த்து, தோசையாக ஊற்றி வார்க்கவும். 

மருத்துவப் பலன்கள்:
சோளம், தினையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம்.  ரத்தசோகையைத் தடுக்கும். 

Offline MysteRy

வல்லாரை தோசை



செய்முறை:
ஒரு கப் அரிசி, தினை மற்றும் உளுந்து கால் கப் எடுத்து நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் வல்லாரைக் கீரையை நன்றாகக் கழுவி, நறுக்கிச் சேர்க்கவும். உப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல் காய்ந்ததும் ஊற்றி தோசையாக வார்க்கவும்.   

மருத்துவப் பலன்கள்:
குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. வல்லாரைக்கீரை நல்ல ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். 

Offline MysteRy

கம்பு, சோளம், தினை, வரகு பணியாரம்



செய்முறை:
கம்பு, சோளம், தினை, வரகு இவற்றைச் சம அளவு எடுத்து நன்றாக ஊறவைத்து, தண்ணீர்விட்டு அரைக்கவும். இதை, பணியாரமாவுடன் கலந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும்.  சிறிதளவு வெல்லம் சேர்த்துப் பணியாரக் குழியில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.     

மருத்துவப் பலன்கள்:
பீட்டாகரோட்டின் இதில் அதிகம் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை



செய்முறை:
மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் சம அளவு அரிசிமாவு, சாமை மாவு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, தோசை மாவுடன் கலக்கவும். இந்த மாவை எட்டு மணி நேரம் ஊற வைத்து தோசைக்கல் காய்ந்ததும் தோசையாக ஊற்றி எடுக்கவும்.   

மருத்துவப் பலன்கள்:
வாரம் ஒரு முறை குழந்தைகளுக்குச் செய்துதரலாம்.  மஞ்சக்காமாலை வராமல் தடுக்கும். பல் வலியைக் குறைக்கும். 

Offline MysteRy

சாமைப் பொங்கல்



செய்முறை:
சாமை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வாசனை வரும் வரை லேசாக வறுத்து, தேவையான நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பொங்கலில் கொட்டிக் கலக்கவும். 

மருத்துவப் பலன்கள்:
சாமையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.  ரத்தசோகை வராமல் தடுக்கும்.

Offline MysteRy

கேழ்வரகுக் கூழ்



செய்முறை:
பாத்திரம் ஒன்றில் நீரைக் கொதிக்கவைத்து அதில் மாவைக் கொட்டி கெட்டி ஆகாமல், கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்கவும். அதில் தயிரை ஊற்றிக் கூழாக்கி மாம்பருப்பு (மாவற்றல்) குழம்புடன் சாப்பிடலாம்.

மருத்துவப் பலன்கள்:
இரும்புச் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு கொஞ்சமும் இல்லை.  அதிக அளவு நீர்ச் சத்தும், நார்ச் சத்தும் இதில் இருக்கின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் வலிமையாகும்.

Offline MysteRy

கவுனி அரிசி



செய்முறை:
 கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள், அதை நீராவியில் வேகவைத்து, அதனுடன் கருப்பட்டி வெல்லம், நெய், தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்துக் கலக்கவும்.

மருத்துவப் பலன்கள்:
மூட்டு வலிக்கும், இடுப்பு வலிக்கும் நல்ல நிவாரணி.

Offline MysteRy

மசாலா சீயம்



செய்முறை:
பச்சரிசி உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை எலுமிச்சைப் பழ அளவில் உருட்டி, கடலை எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். காரச் சட்னியுடன் இதைச் சாப்பிட சுவையாக இருக்கும்.

மருத்துவப் பலன்கள்:
கடலை எண்ணெயில் பொரிப்பதால் இது உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. மேலும், உளுத்தம்பருப்பு சேர்ப்பதால், இளம் பெண்களின் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

கூழ் பாயசம்



செய்முறை:
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து வேகவைக்க வேண்டும். பிறகு வெல்லம் சேர்த்துக் கலக்கவும்.  இதனுடன் பால் அல்லது தேங்காய்ப்பால் ஊற்றிக் கலக்கவும்.  நெய்யில் முந்திரி, தேங்காய்த் துருவலை வறுத்துச் சேர்க்கவும்.

மருத்துவப் பலன்கள்:
வயிற்றுப்புண்ணுக்கு இது நல்ல மருந்து. வயிற்று எரிச்சல், பொருமலைப் போக்கும். இனிப்பாக இருப்பதால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Offline MysteRy

வெண்டைக்காய் மண்டி



செய்முறை:
வெண்டைக்காய், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி வதக்கிக்கொள்ளவும்.  மொச்சையை ஊறவைத்து அதையும் விழுதுபோல் அரைத்துக்கொள்ளவும்.  கடாயில் சிறிது புளிக் கரைசலை ஊற்றி, அதில் வதக்கி வைத்துள்ளவற்றையும், விழுதையும் சேர்த்து சூடு செய்யவும்.  அடுப்பிலிருந்து இறக்கும் முன்பு, பருப்பு ஊறவைத்த அடித் தண்ணீரைச் சேர்க்கலாம். கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டையும் தூவி விடவும்.

மருத்துவப் பலன்கள்:
வெண்டைக்காய் பிடிக்காதவர்களுக்கும் இதன் சுவை நிச்சயமாகப் பிடிக்கும், ஞாபகசக்திக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

சாமைக் கிச்சடி



செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைக் தாளிக்கவும். நறுக்கிய காய்கறிக் கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும்.  இதில் அரை கப் சாமை சேர்த்து இரண்டரை கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

மருத்துவப் பலன்கள்:
ஆண்மைக் குறையை நீக்கும்.  மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்தது.

Offline MysteRy

தினைப் பொங்கல்



செய்முறை:
அரை கப் தினை, பச்சைப் பயறு கால் கப் இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  பிறகு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கி, கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம், மிளகு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துச் சாப்பிடலாம்.

மருத்துவப் பலன்கள்:
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.  இதயத்தைப் பலப்படுத்த உதவும்.  மாதவிலக்கு பிரச்னையைச் சரிசெய்யும்.