Author Topic: தேங்காய்ப்பால் முறுக்கு  (Read 442 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்

    அரிசி மாவு – 4 கப்
    வறுத்த அரைத்த உளுத்தம் பருப்பு மாவு – 1கப்
    வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
    தேங்காய் – 1
    சீரகம் – சிறிதளவு
    மிளகு – சிறிதளவு
    உப்பு – தேவையான அளவு

செய்முறை

    தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய்பால் எடுக்கவும்.
    மிளகு சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.  இதனுடன் சலித்த அரிசி மாவு,

    வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
    பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும்.
    மாவுடன் தேங்காய்ப் பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.
    பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.
    இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.