Author Topic: தக்காளி ஊத்தாப்பம்  (Read 418 times)

Offline kanmani

தக்காளி ஊத்தாப்பம்
« on: October 18, 2013, 09:35:32 AM »
சுவையான தக்காளி ஊத்தாப்பம் செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்

    பச்சரிசி – 1 /2 கப்
    புழுங்கல் அரிசி – 1 /2 கப்
    தக்காளி – 1 /4 கிலோ
    ஊற வைத்த கடலைப்பருப்பு – 1  மேசைக்கரண்டி
    பொடியாக அரிந்த வெங்காயம் – 1 /4 கப்
    மல்லிதழை, கறிவேப்பிலை  – சிறிது
    துருவிய தேங்காய், காரட் – விருப்பத்திற்கேற்ப
    பச்சை மிளகாய் விழுது – 2  – 3  பச்சை மிளகாய்
    உப்பு – தேவையான அளவு

செய்முறை

    அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
    தக்காளியை ஜூஸ் செய்து, அரைத்த மாவில் கொட்டிக் கலக்கவும்.
    இதனுடன் ஊற வைத்த கடலைப்பருப்பு, பொடியாக அரிந்த வெங்காயம், மல்லிதழை, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், காரட் மற்றும் தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் விழுது  சேர்த்து 2  – 3  மணி நேரம் புளிக்க வைத்த பிறகு ஆப்பம் சுடவும்.