Author Topic: பீஸ் கிச்சடி வித் சிம்பிள் சில்லி சிக்கன்  (Read 472 times)

Offline kanmani



    பாஸ்மதி அரிசி - 1 1/2 டம்ளர்
    தேங்காய் பால் - ஒரு டம்ளர்
    வெங்காயம் - ஒன்று (பெரியதாக)
    தக்காளி (பொடியாக அரிந்தது) - 2 தேக்கரண்டி
    பச்சை பட்டாணி - கால் கப்
    பட்டை - 2 இன்ச் அளவு
    மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    புதினா தழை - சிறிது
    எண்ணெய் - 5 தேக்கரண்டி
    நெய் - ஒரு தேக்கரண்டி
    சிக்கனுக்கு;
    சிக்கன்(எலும்பில்லாதது) - கால் கிலோ
    இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
    ரெட் ஃபுட் கலர் - சிறிது
    கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
    கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
    சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
    தக்காளி சாஸ் - கால் தேக்கரண்டி
    பிரட் கிரம்ஸ் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிப்பதற்கு

   

பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
   

அரிசியை மூன்று முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
   

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
   

வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
   

பின்பு பட்டாணி, புதினா, மல்லி தழைகள் மற்றும் மசாலாத் தூள் வகைகள் போட்டு வதக்கவும்.
   

எல்லாம் சேர்ந்து வதங்கியதும் தேங்காய் பாலும், ஒன்றரை டம்ளர் தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பும் போடவும்.
   

கொதி வந்ததும், ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி சேர்க்கவும்.
   

அதன் பிறகு நன்கு கொதிக்கும் போது குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 8 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
   

சுவையான உதிரியான பீஸ் கிச்சடி தயார். வெஜ் பிரியர்கள் எண்ணெய் கத்திரிக்காய், புதினா துவையலுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
   

சிக்கன் ஃப்ரைக்கு: நன்கு கழுவிய சிக்கனை சிறு,சிறு துண்டுகளாக்கி அதனுடன் எண்ணெய் தவிர்த்து அனைத்து சாமான்களையும் சேர்த்து பிரட்டி, பத்து அல்லது பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
   

10 நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.