என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - கால் கப்
பால் - 2 கப்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்.
எப்படி செய்வது?
வெல்லத்தை பாலில் தட்டிப்போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து பாலை ஊற்றி அடை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளுங்கள். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, நெய்யை விரவி, மாவை தோசையாக ஊற்றுங்கள் (சற்று கனமாக ஊற்றலாம்). தோசையின் மேற்புறமும் நெய்யை விரவி திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள். ஆந்திர பாரம்பரிய சிற்றுண்டி கோதுமா பிண்டி தீப்பி அட்டு ரெடி.