Author Topic: தால் மக்கானி  (Read 413 times)

Offline kanmani

தால் மக்கானி
« on: October 16, 2013, 09:02:52 PM »
என்னென்ன தேவை?

மக்கானி பதப்படுத்திய தாமரைக்காய்) - 10,
உளுந்து, ராஜ்மா - தலா அரை கப்,
வெங்காயம் - 2,
தக்காளி - 3 பெரியது,
பட்டை - சிறு துண்டு,
கிராம்பு, ஏலக்காய் - தலா 2, 
பிரிஞ்சி இலை -  சிறிது,
தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
வெந்தையக்கீரை - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப,
தாளிக்க நெய் - 2 டீஸ்பூன்,
அலங்கரிக்க - வெண்ணெய்,
ஃப்ரெஷ் க்ரீம் (தேவைக்கேற்ப),
கொத்தமல்லி -  தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது? 

கறுப்பு தோலோடு உள்ள உளுந்து ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். குக்கரில் பயறுகளை குழையாமல் வேகவிட்டு எடுத்து வைக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது,  தக்காளி, வெங்காயம்  சேர்த்து எண்ணெயில் பிரியும் வரை வதக்கி தனியா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும்  (பச்சை வாசனை போகும் வரை) இறக்கி வைத்து, கடைசியாக மீண்டும் ஒருமுறை தாளிப்பு நெய்யை சூடாக்கி சீரகம், பொடித்த இஞ்சி, வெந்தயக்கீரை  போட்டு தாளித்து கலவையில் கொட்டி மக்கானியையும் சேர்த்து சூடாக இருக்கும்போதே வெண்ணெய், கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும்.