என்னென்ன தேவை?
தரமான உளுத்தம்பருப்பு (முழு உளுந்து) - ஒரு பெரிய கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
கெட்டியான தயிர் - 4 கப்,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
ஸ்டஃப்பிங்... பச்சைமிளகாய், இஞ்சி, மல்லித்தழை யாவும் பொடியாக நறுக்கி மாவின் உள்ளே வைத்து வடை செய்யலாம். அல்லது பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் அடித்து, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் உப்பு சேர்த்து மத்தியில் வைத்து வடை செய்யலாம். பூந்தி கொண்டு அலங்கரிக்கவும்.
பஞ்சாபி ஸ்டஃப்பிங்... சிறிது தேங்காய்த்துருவல், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், திராட்சை, ட்யுட்டி ப்ரூட்டி கலந்தது - 1 டீஸ்பூன், வடை மாவின் மத்தியில் வைத்து மூடி பிறகு வடை தட்டி பொரித்து தயிரில் ஊறவைத்து பரிமாறவும்.
எப்படி செய்வது?
பருப்பை கழுவி தேவையான தண்ணீர் விட்டு ஒரு மணிநேரம் ஊறவைத்து பிறகு தண்ணீரை வடித்து விட்டு உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு வடையாக உருட்டி பஞ்சாபி ஸ்டஃபிங் (பூரணத்தை) வைத்து மூடி, விருப்பமான வடிவத்தில் செய்து வடையாக தட்டி எடுக்கவும். ஒரு தட்டில் வைத்து மேலே கெட்டியான தயிர் ஊற்றி ஊறியதும் இனிப்பு, புளிப்பு சட்னி, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.