என்னென்ன தேவை?
கோதுமை மாவு - அரை கிலோ,
சுக்குத்தூள் - 10 கிராம்,
நெய் - அரை கிலோ,
முந்திரி, திராட்சை, நட்ஸ் - தேவைக்கேற்ப,
வெல்லம் அல்லது சர்க்கரை - அரை கிலோ.
எப்படிச் செய்வது?
கோதுமை மாவில் தண்ணீர் விட்டு, பக்கோடா மாவு பதத்துக்குப் பிசையவும். அதை சூடான எண்ணெயில் பக்கோடா பொரிப்பது போல பொரித்தெடுத்து, ஆறியதும், மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். நெய்யை சூடாக்கி, அதில் முந்திரி, திராட்சை, நட்ஸ் சேர்த்து வறுத்து, அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து, அதில் 750 மி.லி. தண்ணீர் விட்டு, மறுபடி அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், பொடித்த கோதுமை மாவு, சுக்குத்தூள் சேர்க்கவும். வெல்லமாக இருந்தால் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி, மாவில் சேர்க்கவும். சர்க்கரை என்றால் அப்படியே சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு சேர்ந்து வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.