Author Topic: குடைமிளகாய் புர்ஜி  (Read 493 times)

Offline kanmani

குடைமிளகாய் புர்ஜி
« on: October 07, 2013, 09:00:49 AM »
தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் - 2 வெங்காயம் - 1 சீரகம் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு நறுக்கிய குடைமிளகாய், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.

பின் ஒரு பௌலில் கடலை மாவைப் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அந்த கடலை மாவை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும். இப்போது சூப்பரான குடைமிளகாய் புர்ஜி ரெடி!!!