உன்னை நினைத்து கொண்டிருப்பதால்
தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவு மட்டும் இல்லை
எனில் சருகாகி இருப்பேன்
சருகானாலும் ஆனந்தமே
ஏன் தெரியுமா
செடி வாழ
சருகாகி உரமாகி
இலையாகி மொட்டாகி
மலராகி உன் பாதம்
அடைந்திடுவேன்
என் மறு ஜென்மத்தின்
எண்ணமும் ஈடேரிவிடும்