என்னவனே
என் இதயத்தில்
காதல் என்னும் விதை
விதைத்தாய்
விதைத்தவன் மட்டும் தான்
நீ
அதை கொடியாக்கி
உன் மேல் படர விட்டு
மலர்ந்து மணம் வீசும்
மலராக மாற்றியவள்
நான் அல்லவா
என்னையும் காலையில்
மலர்ந்து மாலையில்
உதிரும் மலராக அல்லவா
உதிர விட்டு விட்டாய்
உதிர்ந்தது நான் மட்டுமல்ல
என் இதயமும் தான்
என்பதை அறிந்தும்
உதிரவிட்டாயா என்னவனே
விதைத்த உனக்கே
உன் மலரை பற்றி
எண்ணம் இல்லாமல்
போனது ஏனோ
நம்மை உலகில்
விதைத்த ஆண்டவனுக்கு
நம் நிலை புரியாமல் போகுமோ
விதைக்கே தன்னால்
உருவான மலரின்
நிலை புரியாமால்
போகுமோ
என்னை படைத்த
கடவுள் அல்லவா
நீ
ஏன் மறந்தாய்
என்னவனே என்னை