Author Topic: மீல் மேக்கர் கபாப்  (Read 511 times)

Offline kanmani

மீல் மேக்கர் கபாப்
« on: October 02, 2013, 11:51:14 PM »
தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் அதனை தண்ணீரில் இருந்து எடுத்து, நீரை முற்றிலும் பிழிந்து விட வேண்டும். பின்பு அதன் மேல் இஞ்ச பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பிறகு மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டில் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அந்த மீல் மேக்கரை, அதில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் மைக்ரோ ஓவனை 200 டிகிரில் சூடேற்றி, பேக்கிங் டிஷ்ஷில் ஊற வைத்துள்ள மீல் மேக்கரை வைத்து, அதன் மேல் சிறிது அந்த கலவையை ஊற்றி, எண்ணெய் ஊற்றி, 10 நிமிடம் க்ரில் செய்ய வேண்டும். பின் அதனை திருப்பிப் போட்டு, 3-4 நிமிடம் க்ரில் செய்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான மீல் மேக்கர் கபாப் ரெடி!!!