Author Topic: ~ சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்! ~  (Read 829 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226408
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்!

உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால், அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை. சுவையாக இருக்கிறது என்று அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரிக்காயை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். அது சரியல்ல... பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.
'நம் மக்கள் மறந்த கனிகளில், அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான். இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. 



ஆண்களுக்கு 60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள். இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைபாட்டைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது!
பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல, செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.



குழந்தைகள் மற்றும் பெண்களின் பருவ மாற்றங்களின்போது ஏற்படும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும், எலும்பு வீக்கம் அடையாமல் இருப்பதற்கும் இது நல்ல மருந்தாகும். இதிலுள்ள 'பாலி அன்சாச்சுரேட் அமிலம்’ செல்கள் புதுப்பித்துக் கொள்வதற்கும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமி தாக்கதலில் இருந்தும் உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
பேரிக்காய் மட்டுமல்ல, பேரிக்காய் மரத்தின் பட்டையும் கூட மருத்துவப் பயன்மிக்கதுதான்! பேரிக்காய் மரப் பட்டை வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. பட்டையைக் களிம்பாக்கி தசை பிடிப்பு, தசை வீக்கம் உள்ள இடங்களில் தேய்த்தால் வீக்கம் குறையும்.
பேரிக்காயில் நிறைய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து நாட்டுப்பழங்களை உண்பது மிகவும் சிறந்தது. தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், பழங்களை சாதாரணமாகக் தண்ணீரில் கழுவுவதற்குப்பதில், வெந்நீரில் கழுவி உண்பது மிகவும் அவசியம்' என்றார்.