Author Topic: சேப்பங்கிழங்கு சுக்கா  (Read 426 times)

Offline kanmani

சேப்பங்கிழங்கு சுக்கா
« on: October 01, 2013, 11:34:08 PM »

    சேப்பங்கிழங்கு - கால் கிலோ
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - ஒரு துண்டு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    பச்சை மிளகாய் - ஒன்று
    சாம்பார் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிது
    கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    தாளிக்க:
    கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

 

 
   

வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை ஒன்று போல் நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும்.
   

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
   

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
   

வதங்கியதும் தீயை குறைத்து வைத்து உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
   

பிறகு வேக வைத்து நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து கிழங்குடன் மசாலா சேரும்படி நன்கு பிரட்டிவிடவும். 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு முறை பிரட்டிவிட்டு இறக்கவும்.
   

சுவையான சேப்பங்கிழங்கு சுக்கா தயார்.