Author Topic: ~ குழந்தைகளுக்கு வயிறு உப்புதலை சரிப்படுத்த இயற்கை வைத்தியம்:- ~  (Read 543 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226409
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளுக்கு வயிறு உப்புதலை சரிப்படுத்த இயற்கை வைத்தியம்:-




நமது செல்ல குழந்தைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு எப்போது பசிக்கிறது, எந்த நேரங்களில் என்ன செய்கிறது என்பதை அதன் அசைவுகளில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டும். குழந்தை பெற்றால் மட்டும் போதாது வளர்கவும் கற்று கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான வீடுகளில் பாட்டிகள் சொல்லுவதை கேட்டிருப்பீர்கள். தீடீரென குழந்தை அழும் போது அதன் காரணம் என்ன என்று புரியாது.

பிறந்த குழந்தை அதிகமாக பால்குடித்து வயிறு உப்பி விட்டால் 2 இளம்பெரிய வெற்றிலைகளை எடுத்து விளக்கெண்ணெயை ஒரு பக்கம் தடவி மிகவும் லேசாக சூடாக்கி வயிற்றின் மீது போத்தால் உப்புசம் குறையும்.

சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்பட்டால் காய்ந்த திரா‌ட்சை 10 கொதிக்க வைத்து கசக்கிப் பிழிந்து வடிகட்டி கொடுத்தால் உப்புசம் தானே இறங்கும்.

குளிர் காலத்தில் வீட்டுத் தரை ஜில்லென்று இருக்கும் இதனால் குழந்தைகள் நடந்தால் சளி ஏற்படும், இதனை‌த் தடுக்க சாக்ஸ் இருந்தால் குழந்தைகள் காலில் மாட்டி விடுங்கள்.

சூட்டினால் வயிறு வலித்து அடிக்கடி மலம் கழிக்கும் குழந்தைகளுக்கு வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டால் உடனே நின்று விடும். 3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனைக் கொடுக்கலாம்.

வயிறு உப்புசம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு சுக்கு வெ‌‌ந்‌நீரில் சர்க்கரை கலந்து கொடுத்தால் மலம் கழித்து உப்புசம் குறையும்.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏற்புடையதா என்பதை அறிய அதனை நீரில் சிறிதளவு விட்டுப் பார்க்கவும். நீருடன் கலக்காமல் பால் தனித்திருந்தால் தாய்க்கு உடல் நிலை சரியில்லையென்று அர்த்தம்