கீமா (அரைத்த இறைச்சி) - கால் கிலோ
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் கீற்று - 3 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
மிக்ஸியில் கீமாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அரைத்து எடுத்து வைக்கவும்.
பிறகு மிக்ஸியில் தேங்காய் கீற்றை அரைத்து அதை கீமா கலவையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெயை சூடாக்கி கீமா கலவையை சிறிது சிறிதாக எடுத்து இப்படி தட்டையாக தட்டி இரண்டு பக்கமும் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
சுவையான உருண்டை கலியா தயார். இது சாம்பார், ரச சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். இதே முறையில் இறாலிலும் செய்யலாம்.