பழுத்த தக்காளி - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லித் தழை - சிறிது
தேங்காய் பால் (அ) பசும்பால் - அரை டம்ளர்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - ஒரு பல்
மிக்ஸியில் தக்காளியுடன் சீரகத்தைச் சேர்த்து அரைக்கவும்.
அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.
அதனுடன் கலந்து வைத்துள்ள தக்காளி விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் பால் சேர்க்கவும்.
மழைக்காலத்திற்கேற்ற சூடான, சுவையான தக்காளி ரசம் தயார். சாத்ததுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.