Author Topic: ஸ்டஃப்டு கலர்ஃபுல் கேப்சிகம்  (Read 419 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

சின்ன குடமிளகாய் - 6 அல்லது சிவப்பு,
மஞ்சள், பச்சை  என்று 6-8 கலர் மிளகாய்கள், பனீர் - அரை கப்,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப்,
பச்சைமிளகாய் - 1,
இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப,
சிறிது மல்லி, சிறிது துருவிய எலுமிச்சை தோல் - அரை கப்,
மைதா அல்லது கடலை மாவு, துருவிய சீஸ் - சிறிது அல்லது தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
 
ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும். இத்துடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு,  துருவிய பனீர், உப்பு, துருவிய எலுமிச்சை தோல் சேர்த்து கிளறி இறக்கவும். இது பூரணம். கடலை மாவு அல்லது மைதாவை குழைத்து  வைத்துக்கொள்ளவும். குடமிளகாயை சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். அல்லது குடமிளகாயை  துடைத்து எண்ணெய் கொண்டு பிரஷ் செய்து ஃபோர்க் ஸ்பூன் கொண்டு குத்தி கேஸ் மேல் ஃபிளேமில் காட்டினால் வெந்து விடும். (கருகாமல் இருக்க  வேண்டும்) பின் அதன் உள்ளே பூரணத்தை ஸ்டஃப் செய்து, கடலை மாவு அல்லது மைதா மாவு கரைசல் கொண்டு  வேகமாக சீல் செய்து அதன்  மேல் துருவிய சீஸ் வைத்து பேக் செய்யலாம் அல்லது தவாவின் மேல் வைத்து சிறிது எண்ணெய் சுற்றிலும் ஊற்றி வேகவைத்து எடுக்கலாம்.  ஓவன், மைக்ரோவேவிலும் பேக் செய்யலாம்.