Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கதைகள்
»
~ சிறுகதை -"கடவுள்னா யாரு" ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சிறுகதை -"கடவுள்னா யாரு" ~ (Read 1321 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222061
Total likes: 27485
Total likes: 27485
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சிறுகதை -"கடவுள்னா யாரு" ~
«
on:
September 22, 2013, 09:35:47 PM »
சிறுகதை -"கடவுள்னா யாரு"
அன்று விநாயகர் சதுர்த்தி....
என் கணவருக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்றாலும் கடவுள் பெயரால் விடுமுறை கிடைப்பதால் கடவுள் உலகில் இருக்கட்டும் என்றார்...
தினமும் பம்பரமாய் சுழலும் நம் வாழ்க்கை ஞாயிறு விடுமுறை போதாமலே போகும்... அரசு விடுமுறை என்று ஒன்று வந்தால் நம் சக்கரமும அன்று நின்று தான் போகும்..
குழந்தைகள் உள்ள வீட்டில் ஒரு விதம்...
அம்மா : உங்களுக்கு லீவ் விட்டு என் உயிரை எடுக்கறாங்க .. பேசாம ஞாயிறும் ஸ்கூல் வைக்கலாம் ...
தேன்மொழியின் வீட்டில் தேன்மொழியும் அவள் கணவரும் மட்டும்தான்.. அவரது வேலை நேரம் காலை 9 மணி – இரவு 9 மணி... இவளுக்கு காலை 9 – மாலை 6 மணி வரை தான்...
தேன்மொழியும் ராமும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன்...
தேன்மொழி கடவுள் மேல் அதீத நம்பிக்கை உடையவள்.. அவன் அவளுக்கு எதிர்ப்பதம்.
தேன்மொழி அதி காலையிலே எழுந்து பூஜை முடித்து சமையல் செய்து கொண்டிருந்தாள் .. அவன் மெதுவாக எழுந்து வந்து என்ன இன்னைக்கும் ஆபீஸ் இருக்கா? கேட்டான்.
தேன்மொழி இல்லை இன்று பூஜைக்காக எழுந்தேன் என்று சொல்ல அவன் இதழோரம் ஒரு நமட்டு சிரிப்பு....
அந்த சிரிப்பின் அர்த்தம் அறிந்ததும் தேன்மொழி தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள்...
ராம்: காபி கொண்டு வா
தேன்மொழி : குளிச்சுட்டு வந்த தா குடிக்க தண்ணி கூட குடுப்பேன்
ராம்: இதென்ன வம்பா இருக்கு. லீவ் நாள் கூட இவ்ளோ சீக்ரமா குளிக்கணுமா....
தேன்மொழி : சரி லீவ் நாள் தான அப்பறம் எதுக்கு காபி டிபன் எல்லாம்..
ராம்: அடிப்பாவி .. விட்டா விரதம் இருக்க சொல்லுவ போலயே ... போடி இவளே.. இரு இரு வந்து உன்ன கவனிச்சுக்குறேன் ...
தேன்மொழி : உதட்டுகே தெரியாத மாறி ஒரு சிரிப்பை சிரித்து கொண்டான் ...
ராம்: மேடம்.. குளிச்சாச்சு .. இப்பவாது சுடு தண்ணி சாரி காபி கெடைக்குமா..
தேன்மொழி : இந்த வாய் மட்டும் இல்லனா உன்ன எப்பவோ நாய் கவ்விட்டு போயிருக்கும்... இந்தாங்க ...
ராம்: ஹ்ம்ம்.. அப்பறம் இன்னைக்கு சாப்பாடு எல்லாம் பலமா இருக்கும் போலயே.. இன்னைக்கு புல்லா சாப்ட்டுடே இருக்கலாம் போலயே ..
தேன்மொழி : இல்ல இல்ல. இது கடவுளுக்காக செய்றேன்.. கை வெச்ச மவனே நீ செத்த..
ராம்: ஹே தேன்மொழி நா உன் புருஷன் டி .. என்ன கொஞ்சம் கூட மரியாதை தர மாட்டிங்கற ..
தேன்மொழி : போங்க நீங்க எப்ப பார்த்தாலும் காமெடி பண்ணிக்கிட்டு..
ராம்:
??
ராம் tt.v பார்க்கறான் .. தேன்மொழி வாங்க சாப்டலாம்.
ராம்: ஹ்ம்ம்.எனக்கு பசிக்கல..நீ சாப்டு டி.
தேன்மொழி அட வாங்க என்னைக்காவது ஒரு நாள் தான் சேர்ந்து சாப்டறோம்.. கொஞ்சமா சாப்டுங்க
ராம்: சரி வறேன் .. என்ன spஸ்பெஷல்??
தேன்மொழி : கம்மங்கூழ் ..
ராம்: என்ன டி நக்கலா. காலைல இருந்தே நீ சரி இல்ல.. எகத்தாளமாவே பேசுறியே .. என்ன ஆச்சு?? கோவமா என்மேல...இல்ல அடி ஏதாது வேணுமா..
தேன்மொழி : அப்டிலாம் ஏதும் இல்லங்க.. சும்மா தான்.சரி வாங்க சாப்டலாம்
சாப்பிடும் போது,
ராம்: சாப்டு. என்ன யோசனை.
தேன்மொழி : தட்டையே வெறித்து பார்த்தாள் ..
ராம்: என்ன கை தட்டு கிட்டையே வர மாட்டேங்குது.
தேன்மொழி : நீங்க சாப்டுங்க மொதல்ல நான் சாப்டறேன்...
5 நிமிடங்கள் கழிந்தன ...
தேன்மொழி : ஏங்க
ராம்: சொல்லு டி
தேன்மொழி : ஒன்னு கேட்டா கோவிக்க கூடாது
ராம்: கேளு.பார்க்கலாம்
தேன்மொழி : ஏங்க
ராம்.: சொல்லு....
தேன்மொழி . ....
ராம்: சொல்லு என்ன ... என்கிட்ட கேக்க ஏன் இவ்ளோ தயக்கம்.சொல்லு ...
தேன்மொழி : இன்னைக்கு என்ன நாள் நியாபகம் இருக்கா ??
ராம்: என்ன விநாயகர் சதுர்த்தி...
தேன்மொழி : அது மட்டும் தானா ??
ராம்: ஆமா வேற என்ன.. பர்த்டே இல்ல, கல்யாண நாளும் இல்ல. வேற என்ன?? சாரி எனக்கு தெரியல...நீயே சொல்லிடேன்..
தேன்மொழி : அவள் கண்ணில் இருந்து வழிந்த நீர் கைகளின் மேல் விழுந்தது...
ராம்.: ஹே என்னாச்சு . ஏன் அழற.சொல்லு என்னன்னு .. நல்லா தான டி பேசிட்டு இருந்த...
தேன்மொழி . : கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க.
ராம்: கைகளை கழுவி எழுந்து வந்து அவள் அருகே நின்று .. ஹே என்னாச்சு. ஏன் அழற. அழாத.நீ அழுதா என்னால பார்க்க முடியல...என்று சொல்ல சொல்ல அவன் கண்களில் இருந்தும் கண்ணீர் வர ஆரம்பித்தது....
தேன்மொழி : எழுந்து .. அழாதீங்க என்று அவன் கண்ணீரை துடைக்க. நீ அழாத என்று அவன் அவள் கண்ணீரை துடைக்க ..தேன்மொழி அவன் மேல் தன் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள் ...
அவன் அவள் தலையை கோதியவாறே .. என்னாச்சு.. சொல்லு..எவ்ளோ நேரம் அழுவ.எனக்கு பயமா இருக்கு நீ அழறத பார்த்தா....இன்னைக்கு என்ன நாள்??
தேன்மொழி : ஒரு பக்கம் நல்ல நாள் இன்னொரு பக்கம் கெட்ட நாள்
ராம்: புரியல
தேன்மொழி : எனக்கு நீ தா வேணுன்னு நா suicide பண்ணிகிட்ட நாள் ...என்று சொல்லி முடிக்கும் முன்னே அவளுக்குள் இருந்த அழுகை பீறிட்டு கொண்டு வந்தது
ராம்: அதிர்ச்சியுடன்... ரதியை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டான்.... அதை எல்லாம் எதுக்கு இப்ப நினைச்சுட்டு இருக்க.. அதான் உனக்கு ஏதும் ஆகல , நமக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆக போகுது. எனக்கு தெரிஞ்சு எந்த பிரச்சனையும் இல்லையே .நமக்கும் சரி நம்ம பெற்றோருக்கும் சரி. அதுக்கு என் டி இப்டி அழுகற..என முடிக்கும் முன்னே அவனது கண்களும் கலங்கிதான் போயிருந்தன ..
இருவரும் அப்படியே அழுதவாறே நின்றிருக்க... ராமின் தொலைபேசி அவனை அழைத்தது ...
ராம்: தொலைபேசியில் .. நா ரெடி தான் டா.போகலாம் .. போய்ட்டு சீக்கிரமாக வந்துடலாம் என்று பேசி முடித்து விட்டு அவளை பார்த்து நா போயிட்டு சீக்ரம் வந்துடறேன் என்றான்.
தேன்மொழி ; சரிங்க.பார்த்து போய்ட்டு வாங்க ..
ராம்: புறப்பட்டு கொண்டிருந்த ராமுக்கோ மனதே இல்லை மனைவியை விட்டு செல்ல...அவ்வளவு பெரிய சுமையை அவள் மட்டும் எப்படி சுமப்பாள் என்று எண்ணியவாறே வழிந்த கண்ணீரை துடைத்தான் .. ஆனால் முன்னரே திட்டமிட்ட செயல் நண்பன் ஒருவனை காண செல்ல வேண்டும் என்று.. செய்வதறியாது கிளம்பினான் ...
போய்ட்டு வறேன்.. நீ முதல்ல சாப்டு.. ரெஸ்ட் எடு.டிவி பாரு.. நா அதுக்குள்ளே வந்துடுவேன் சரியா.. உனக்கு போன் பண்றேன் என்று சொல்லி , கதவை சாத்திவிட்டு சென்றான்.
தேன்மொழி வாழ்க்கை சக்கரம் ஆறு ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தது ... காதல் , கனவு, மகிழ்ச்சி, அழுகை , துன்பம் , என எல்லாம் தந்த வாழ்வு அது..
தேன்மொழி ராம் காதல் .......
Cooker விசில் வரவே கனமான மனதுடன் சமையல் அறைக்கு சென்று தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள்...
ராம் : டேய் அவனை பார்த்ததும் உடனே கிளம்பிடலாம் டா.
மகிழன் : ஏண்டா இன்னைக்கு லீவ் தான.. மெதுவா வீட்டுக்கு போகலாம்ல.. நம்ம மீட் பண்றதே என்னைக்காவது ஒரு நாள் தான்.. தேன்மொழி ஏதும் சொல்லி இருக்க மாட்டா .உனக்கென்ன வேல சீக்ரம் வீட்டுக்குபோய் ??
ராம் : சொன்னா கேளு. புரிஞ்சுக்கோ டா. அவ வீட்ல தனியா இருப்பா
மகிழன் : நடிக்காத டா. அவல தனியா விட்டுட்டு நீ ஊர் ஊரா போனையே. அப்பவும் அவ தனியா தான இருந்தா..
ராம் : ஐயோ அது வேற டா. ப்ளீஸ் சொன்ன கேளு.
மகிழன் : அதெல்லாம் முடியாது. நீ ரீசன் சொல்லு நா விடறேன்
ராம் : இப்ப அவ அழுதுட்டு இருப்பா.நா போற வரை அவ அழுதுட்டே தான் இருப்பா ..
மகிழன் : டேய் அவ கூட சண்டையா.பாவம் டா. உன்ன விட்டா அவளுக்கு யாரு இருக்கா. நீ திருந்தவே மாட்டயா ...
ராம் : அதெல்லாம் இல்ல டா.விடு நா சொல்றத கேளு.. நா சீக்ரம் கிளம்பிடறேன்.
மகிழன் : போடா. உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண முடியாது
ராம் : எனக்கு தேன்மொழி முக்கியம். அவளுக்கு ஏதாது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது
மகிழன் : டேய் என்னாச்சு. ஏன் இப்டிலாம் பேசுற.. உண்மைய சொல்லு
ராம். : இன்னைக்கு என்ன நாள் தெர்யுமா. அவ எனக்காக suicide பண்ணின நாள்.சொல்லி முடிக்கும் முன்னே ராமின் கண்களில் கண்ணீர் ...
மகிழன் : சட்டென வண்டியை நிறுத்தி விட்டு ராமை திரும்பி பார்த்தான் . அழுத ராமை பார்த்து சாரி மச்சான் . நம்ம போன உடனே கிளம்பிடலாம்னு சொல்லி வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்..
தேன்மொழி : இருக்கையில் அமர்ந்தவாரே கண்கள் மட்டும் டிவி யை பார்க்க எண்ணம் எல்லாம் எங்கோ சென்றன ...
சென்ற வருடம் இந்நேரம்....
காலை 8 மணி
இனி என்னால் ராமோடு சேர்ந்து வாழ முடியாது என என் பெற்றோர் சொன்னது என் காதில் ஒலித்து கொண்டே இருந்தது.. அவன் இல்லாமல் வாழ முடியாது என்ற ஒரே தீர்வோடு ஒரு முடிவுக்கு வந்தேன்...
மறுநாள் விநாயகர் சதுர்த்திக்காக வாங்கி வைத்திருந்த சாணி பொடியை யாருக்கும் தெரியாமல் எடுத்தாள். அம்மா கொடுத்த காபியில் பொடியை கரைத்து குடித்து முடித்தாள். குடித்த கையோடு அவள் போனை எடுத்து ராமிற்கு SMS அனுப்பினாள். Bye , Take Care…
அதை பார்த்த ராமிற்கு ஒன்றுமே புரியவில்லை.ராம் தேன்மொழிக்கு எங்க போற??? எனாச்சு?? என கேட்டு அனுப்பினான்..பதில் வரவில்லை. சிறிது அச்சமடைந்த ராம் தேன்மொழிக்கு call செய்தான். அவள் அவனது அழைப்பை துண்டித்தாள்.
தேன்மொழி : நான் உன்னை பிரிய கூடாது ராம்.பிரிய முடியாது..என் கடைசி கணம் கூட உன் அருகில் தான் இருக்க வேண்டும் என் மனதிற்குள் சொல்லி கொண்டே சிரித்தாள் அழுதாள்.
அவளது கண்கள் களைப்படைந்தன. குடித்தது வேலை செய்ய ஆரம்பித்தது..பாதி கண்கள் மூடிய நிலையில் தேன்மொழி ராமிற்கு கால் செய்தாள் .
ராம் : ஹலோ , தேன்மொழி என்னாச்சு உனக்கு?? வீட்ல பிரச்சனையா?? உன்ன ஏதாவது சொன்னாங்களா??உனக்கு உடம்பு சரி இல்லையா?? என அடுக்கி கொண்டே போனான்??
தேன்மொழி : I Love You Ram …
சொல்லி முடித்ததும் சிரித்தவாறே சரிந்தாள். எதோ தவறு நடந்துள்ளது என அறிந்த ராம் உடனே தேன்மொழியின் வீட்டிற்கு சென்றான்.
தேன்மொழியின் பெற்றோர் அவனை உள்ளே அழைத்தனர். என்னப்பா ? என்றனர் ..
ராம் : சார் தேன்மொழி இருக்காளா?
பெற்றோர் : உள்ள தான் இருக்க பா.ஏன் கேக்ற?
ராம் : சார் அவல போய் பாருங்க..எனக்கு என்னவோ பயமா இருக்கு..
பெற்றோர் பதறியவாறே அவள் அறைக்கு ஓடினர்..ஐயோ என்ற அவள் அம்மாவின் குரல் அந்த வீட்டையே இரண்டாக பிளந்தது..அந்த குரலை கேட்டதும் ராம் ஓடி போய் பார்த்தான் தேன்மொழியை... கையில் தொலைபேசியுடன் வாயில் நுரை தழும்ப... பார்த்ததும் மயங்கி விழுந்தான் ராம் தன்னிலை அறியாமல்....
4 மணி நேர போராட்டத்திற்கு பின் ...
மருத்துவர் : தேன்மொழிக்கு ஒன்னும் இல்ல.உயிர் பிழைசுட்டா....ஆனா ..அவ குடிச்சது அவ கர்ப்பப்பை வரை போயிருக்கு.... அவ உயிர்க்கு எந்த பாதிப்பும் இல்ல .sorry to say this…ஆனா இனி அவளால அம்மாவாக முடியாது...
மூன்று பேரும் மயான அமைதியில் உறைந்திருந்தனர்...
தேன்மொழியின் பெற்றோர் வாயை மூடிக்கொண்டு கதறி அழுதனர்.. ராம் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.. அவ உயிரோடு வந்துட்டாளே அதுவே நமக்கு போதும் சார் என்று...பெற்றோர் இனி அவல யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க சொல்லுங்க...எங்களுக்கு எல்லாமே என் பிள்ளை தான்.. அவ நல்லா வாழ்றத பார்க்க தான் நாங்க உயிரை பிடிச்சுக்கிட்டு வாழ்றோம் என்றார் கண்ணீர் மல்க..
ராம் : சார் உங்களுக்கு விருப்பம்னா நான் அவளை கல்யாணம் செஞ்சுக்கலாமா.
அப்பா : தம்பி நீங்க எப்டி.இந்த உண்மை தெரிஞ்சும் கேட்கறீங்க .. நீங்களோ உங்க வீட்ல இருப்பவர்களோ இந்த குறைய சொல்லி சொல்லி என் பொண்ண வேதனை படுத்துனா???... அவ கஷ்ட படரத எங்களால பார்க்க முடியாது ..
ராம் : சார் அப்படி எல்லாம் நினைக்காதீங்க.உங்களுக்கு உங்க பொண்ணு எவ்ளோ முக்யமோ எனக்கு அவ அத விட முக்கியம்.. எனக்காக அவ அவ உயிரையே விட துணிஞ்சுருக்கா இதெல்லாம் என்ன சார். ப்ளீஸ் நா அவள நல்லா பார்த்துப்பேன் . நம்பிக்கை வந்தா சொல்லுங்க. நா அவளுக்காக காத்திருப்பேன்..
அப்பா : அழுதவாறே ராமின் கையை பிடித்து மாப்ள என்றார்..
ராம் : அவர் கண்ணீரை துடைத்தான் .. அவள் அம்மாவாக முடியாதுன்னு அவளுக்கு தெரிய வேண்டாம். கொஞ்ச நாள் கழிச்சு பொறுமையா சொல்லிக்கலாம்.இப்ப சொன்ன அவளால தாங்க முடியாது என்றான்.. அவர்களும் சரி என்றனர்...
சிஸ்டர் : அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிடுவாங்க. ஒவ்வொருத்தரா போய் பாருங்க...
ராம் : சார் நா உள்ளே போய் வெயிட் பண்றேன். அவள் முழிச்சதும் உங்கள கூப்டறேன்..நீங்க இங்க நிம்மதியா உட்காருங்க ..என்று சொல்லி விட்டு உள்ளே போனான் ..
தேன்மொழியை பார்த்துக்கொண்டே அவள் அருகில் சென்றான்.அவள் கையை பிடித்து அழுதான்....நீ எனக்கு வேணும் தேன்மொழி என்றான்.. எழுந்து அவள் நெற்றியின் மேல் முத்தமிட்டு I Love You தேன்மொழி என்றான் அழுதுகொண்டே..... Love You Ram என்ற குரல் கேட்டு சிலிர்த்தான்..ஆம் தேன்மொழி தான்... கண்ணில் நீர் வழிய ராமை பார்த்தாள் தேன்மொழி...
ராம் : ஏன் இப்டி பண்ணின..நம்ம சேர இத விட்டா வேற வழியே இல்லன்னு நினைச்சியா?? பாவம் உன் அப்பா அம்மா..
தேன்மொழி : நம்ம இனி சேர மாட்டோம்னு தான் இப்டி பண்ணேன். என்னால என் அப்பா அம்மாவ மீறி உன்கூட வரவும் முடியல.. உன்ன விட்டு போகவும் முடியல... எனக்கு வேற வழி தெரியல... நானும் எவ்ளோவோ பேசி பார்த்தேன் அப்பாகிட்ட.அவர் ஒதுக்கவே இல்ல ராம். சாரி.. மன்னிச்சுடு..
ராம் ; ஹ்ம்ம்.எப்டியோ அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டல என்றான்
தேன்மொழி : புரியாமல் ... என்ன சொல்ற ராம் ??
ராம் : ஆமாம் டி. உன் அப்பா அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்டாங்க .. அடுத்த வாரமே நமக்கு நிச்சயம்
தேன்மொழி : அழுது கொண்டே சிரித்தாள். அப்பா , அம்மா எங்கே?
ராம் : வெளில தான் இருக்காங்க..இரு கூட்டிட்டு வறேன்
அவள் Discharge ஆக ஒரு மணி நேரத்திற்கு முன் ..
சிஸ்டர் : தேன்மொழி இனி ஒரு மாசத்துக்கு நீ பாதுகாப்பா இருக்கனும் சரியா
தேன்மொழி : சரிங்க சிஸ்டர்
சிஸ்டர் : யாரு அந்த ராம்.. ரொம்ப நல்லவர்.. உன்ன கல்யாணம் பண்ணிக்க போராராமே..பெரிய மனசு தான் அவர்க்கு..
தேன்மொழி : இதுல என்ன சிஸ்டர் பெரிய மனசு.புரியல
சிஸ்டர் : இல்ல மா இப்பலாம் நல்லா ஆரோக்யமா இருந்தாலே பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகறது அவ்ளோ கஷ்டம்... உன்னால அம்மாவாக முடியாதுன்னு தெரிஞ்சும் அவர் உன்ன எத்துக்கிட்டாரே ..
சிஸ்டர் சொல்ல சொல்ல தேன்மொழிக்கு உண்மை தெரிய வந்தது.. அவள் நெஞ்சே அடைத்தது ..
சிஸ்டர் : ஆமா எதுக்கு மா இப்டி பண்ண..காதலுக்க்காகவா.இப்ப உன்ன காப்பாத்துனது காதலா இல்ல அன்பு தான...ராம் மாறி நல்லா பையன் கிடைக்க நீ குடுத்து வைச்சிருக்கணும்... எனக்கு தோணினத சொல்றேன் .இனி உன் இஷ்டம்
அப்போது கதவு திறக்கும் சத்தம்.ராம் உள்ளே வந்தான்..
சிஸ்டர் :வா உன்ன பத்தி தா பேசிட்டு இருந்தோம்.. ஆமா நீ யாரையும் லவ் பன்லையா என்று கேட்டார்..
ராம் : சிஸ்டர் என் இப்டி..நானும் தேன்மொழியும் தான் லவ் பண்றோம்.அவ suicide பண்ணிக்கிட்டதே எனக்காக தான்..
சிஸ்டர் : தேன்மொழி அமைதியாக இருந்ததை பார்த்து , ஒரு வேலை இவள்ட யாரும் அம்மாவாக முடியாது சொல்லல போலயே.. ஐயோ தப்பு பண்ணிட்டோமே என நினைத்தாள். தேன்மொழி டாக்டர் வந்ததும் அவரை பார்த்ததும் நீ உன் வீட்டுக்கு போகலாம் . என்று சொல்லிகொண்டே அங்கு இருந்து நகர்ந்தாள்.
தேன்மொழி : ராம் சிஸ்டர் சொன்னதெல்லாம் உண்மையா என்றாள் கோபமாக
ராம் : சிறு கலக்கத்துடன்.. புரியலையே .என்ன கேக்ற நீ..
தேன்மொழி .. எனக்கு என்னாச்சு ராம்.உண்மைய சொல்லு ப்ளீஸ்.
ராம். அவள் அருகில் வந்து அவள் தலையை தடவி கொடுத்து ஒன்னும் ஆகல விடு என்றான்..
தேன்மொழி : சரி.எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நான் என் அப்பா அம்மா கூடவே இருக்கறேன் ராம். நம்ம நிச்சயம் உடனே நிறுத்த சொல்லிடு ராம்
ராம் : அதிர்ச்சியுடன்... தேன்மொழி என்ன டி சொல்ற.. எனாச்சு உனக்கு..
தேன்மொழி : எனக்கு ஒன்னும் ஆகல.. உனக்கு தான் எதோ ஆச்சு..நா உன்கூட சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். ஆனா இப்ப நா முழுசா இல்லையே.. இப்ப நாம சேர்ந்தா அது காதல் கல்யாணம் இல்ல பரிவு கல்யாணம்.. வேண்டாம் ராம்.. நா உன் வாழ்கைய கெடுக்க விரும்பல.. நீ நல்லா இருக்கணும்..
ராம் : நீ உன் காதல காட்டிட்ட .. என் காதல நா நிரூபிக்க எனக்கொரு சான்ஸ் கொடு டி.. நம்ம ரெண்டு பேரும் தான லவ் பண்ணோம்...
தேன்மொழி : இதெல்லாம் உனக்கு இப்ப புரியாது ராம்.நாளைக்கு ஏதாது பிரச்சனை வரும்போது அப்ப என்னால தாங்க முடியாது..
ராம் : சரி .இப்ப உன் மேல் எனக்கு காதல் இல்ல பரிவு தாணு சொல்ற.அப்டி தான
தேன்மொழி : ஆமா
ராம் : அப்ப நான் என் கிட்னில ஒரு கிட்னி தானம் பண்ண போறேன்.. அப்ப உனக்கு என் மேல பரிவு வருமா.. இல்ல எனோட ரெண்டு கையையும் வெட்டிகிட்டா என்ன ஏத்துப்பியா... சொல்லு டி அப்ப என்ன கல்யாணம் பண்ணிப்பயா..இல்லனா நானும் இப்பவே சாக ரெடி உனக்காக.செய்யட்டா என்றான் சத்தமாக..
தேன்மொழி : அழுதாள் அழுதாள் அழுதாள் .....
ராம் : இங்க பாரு காதல் எவ்ளோ புனிதமானது... காதலுக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு குறையே இல்ல.புரிஞ்சுக்கோ டி ப்ளீஸ்.. என்ன கொல்லாத.இன்னொரு முறை நம்ம கல்யாணம் நடக்காதுன்னு சொன்ணினா ஏன் அப்டி ஒரு நினைப்பு உன் மனசுல வந்தா கூட நீ என்ன உயிரோட பார்க்க முடியாது என்றான்.
தேன்மொழி : எழுந்து நின்று அவன் நெற்றியில் முத்தமிட்டு ... மாட்டேன் சொல்ல மாட்டேன் என்றாள்...ஆறுதலாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
ரதியின் தொலைபேசி மணி அடிக்க வெடுக்கென நிகழ்காலத்திற்கு வந்தாள். அழைத்தது ரதியின் அம்மா...
ராம் : மகிழன் போலாமா என்றான்
மகிழன் : இதோ கிளம்பிட்டேன் டா.வா நானே உன்ன உன் வீட்ல விடறேன்
ராம் : வேண்டாம் நானே போய்க்றேன்
மகிழன் : இந்த நிலைல உன்ன என்னால தனியா விட முடியாது டா.நா வறேன் .நீ பேசாம இரு என்று வண்டியை கிளப்பினான்...
ராமன் வீட்டை வந்தடைந்தான்... வாசலில் நிறைய செறுப்புகள்.குழம்பியவாறே உள்ளே வந்தான்.. வீட்டிற்குள் நிறைய குழந்தைகள் , 3 பெண்கள்.
ராம் : மேடம்.நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ??
பெண்கள் : சார் நாங்க அன்பு இல்லம் ஆசிரியர்கள்.. மேடம் எங்க கிட்ட 2 வாரத்துக்கு முன்னாடியே வந்து இன்னைக்கு குழந்தைகள எல்லாம் அவங்க வீட்டுக்கு வர சொல்லி இருந்தாங்க.. இப்பவும் அவங்க தான் ஆட்டோ ஏற்பாடு பண்ணி கூட்டிட்டு வந்தாங்க...
ராம் : சரிங்க.உட்காருங்க என்று சொல்லி கொண்டே உள்ளே போனான்.
சமையல் அறையில்
தேன்மொழி தனது இடுப்பில் ஒரு குழந்தையுடனும் நின்று கொண்டிருந்த ஒரு குழந்தையுடனும் சிரித்தவாறே பேசிக்கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சி..அதை பார்த்த ராமிற்கும் மட்டற்ற மகிழ்ச்சி...
ராம் : தேன்மொழி.. சமையல் ரெடியா..பாவம் குழந்தைகள் என்றான்
ராமின் குரல் கேட்டு திரும்பியவாரே
தேன்மொழி : இதோ ரெடி .ஒரு 10 நிமிஷம்ங்க...
அங்கே அமர்ந்து இருந்த குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான். குழந்தைகள் பேச அவன் பேச.. குழந்தைகள் பேசியதை கேட்டு சிரித்தான் சத்தமாக அவனையே அறியாமல்...
ராமின் சிரிப்பு சத்தம் கேட்டு எட்டி பார்த்தாள் தேன்மொழி.. அவனது ஆனந்தத்தை பார்த்து மனதார சிரித்தாள் .கண்களில் ஆனந்த கண்ணீர் மின்னியது..
அனைவரும் சாப்பிட்டு சிறிது நேரம் விளையாடி விட்டு கிளம்பினர்..
குழந்தைகள் தேன்மொழியையும் ராமையும் பார்த்து டாட்டா என்று ஒரு சேர கூக்குரல்
இட்டனர்..அதை கேட்டதும் தேன்மொழிக்கும் ராமிற்கும் சிரிப்பு வந்து விட்டது...
வெளியே செல்லும்போது ஒரு குழந்தை கையை அசைத்து தேன்மொழியை அழைத்தது...தேன்மொழி அந்த குழந்தையின் அருகில் சென்றாள் . உடனே அந்த குழந்தை தேன்மொழியிடம் தாவியது. தேன்மொழி குழந்தையை பார்த்து என்ன செல்லம் வேண்டும் என்றாள். குழந்தை தேன்மொழியின் கன்னத்தில் முத்தம் இட்டது. தேன்மொழி அந்த குழந்தையை அள்ளி அணைத்த படி அந்த குழந்தையின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
அனைவரும் சென்றனர்...
ராம் அமர்ந்திருக்க தேன்மொழி காபி கொண்டு வந்தாள் இருவருக்கும்..
ராம் : ஹே காலைல எதோ கடவுளுக்கு செய்றேன்னு சொன்ன
தேன்மொழி : ஆமா டா. கடவுளுக்கு தான்
ராம் : புரியல டி.அத எல்லாம் குழந்தைகளுக்கு பரிமாறிட்டோமே
தேன்மொழி : அதாங்க.. கடவுளுக்கு தான குடுத்தோம்..
ராம் : குழப்பற டி நீ
தேன்மொழி : ராம் கடவுள்னா யாரு.. நம்ம கஷ்டத்த தீர்த்து வைக்கறவங்க தான கடவுள்..இன்னைக்கு வந்த குழந்தைகள் எல்லாருமே நம்ம கஷ்டத்த தீர்த்து வெச்சுட்டாங்க தானே. இப்ப சொல்லு அவங்க கடவுள் தான நமக்கு இன்னைக்கு ..
ராம் : அவளை தான் மேல் சாய வைத்து தலை உச்சியில் முத்தமிட்டான்.. ஆமாம் டி கடவுள் தான். நீ சொன்ன படி பார்த்தா நீயும் எனக்கு தெய்வம் தான்... அப்ப இந்த உலகத்துல கடவுள் இருக்கு.நான் நம்பறேன் டி .... Love You
தேன்மொழி : Love you Raam
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கதைகள்
»
~ சிறுகதை -"கடவுள்னா யாரு" ~