Author Topic: ~ இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? ~  (Read 483 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226408
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?




இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்குதெரியாது
இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற
வைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில்
இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.

அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.





அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.

இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில்
ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில்
கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது
இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால்
பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும்
ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின்
அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது
வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.

அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.

எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை
விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.