« on: September 19, 2013, 02:37:59 PM »
சைடு வே ஹேண்ட் ஸ்ட்ரெச்சிங்

வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள தேவையற்ற சதை குறைய இந்த பயிற்சி உதவுகிறது. பெண்கள் வீட்டில் ஒய்வு நேரங்களில் இந்த பயிற்சியை தொடர்ந்துசெய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை அகலமாக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியபடி வலது கையின் மணிக்கட்டுப் பகுதியை, இடது கையால் இறுகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.
இரண்டு கைகளும் காது பகுதியை ஒட்டியவாறு இருக்க வேண்டும். மூச்சை அடி வயிறு வரை இழுத்து வலது புறம் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும்.
பின்னர் சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே போல் இடது புறம் செய்ய வேண்டும். இவ்வாறு கைகளை மாற்றி மாற்றி 30 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் வலுவடையும். அடி வயிற்றின் தசைப் பகுதியில் உள்ள தேவையற்ற தசைகளைக் கரைத்துவிடும்.
« Last Edit: September 19, 2013, 02:39:30 PM by MysteRy »

Logged