உன் விழிகள்
என்னை தீண்டி செல்ல
மின்னல் தாக்கியவளாய்
அசைவற்று கல்லாகி
போனேன்
உன் விரல்களோ
உளியாகி
என்னை செதுக்க
கல்லாகிய நானும்
நாணம் கொள்ள
அதை நீயும் ரசிக்க
என்னை செதுக்க
சொல்லி நானும்
என் வெட்கத்திற்கு
விடுமுறை கொடுத்து
உன்னை கெஞ்ச
நீயோ மிஞ்ச
முத்தத்தாலே என்னை
சிற்பமாய் நீயும் செதுக்கி
உன் மூச்சி காற்றை
என்னுள் செலுத்தி
உயிர் பெற வைத்தாய்
என்னவனே
அழகான காதல்
வரலாறு ஒன்று இனிதே
ஆரம்பம் ஆனது