குக்கிங் டிக்ஷனரி
சமையல் துறையில் முக்கியமான கலைச்சொற்கள் இவை. டிவி நிகழ்ச்சிகளிலும் சமையல் கலை நூல்களிலும் இச்சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
சாப்பிங் (Chopping)
காய்கறிகளை பொடியாக அல்லது துண்டுகளாக வெட்டுவது...
கார்னிஷிங் (Garnishing)
சமைத்த பொருட்களின் மேல் காய்/பழங்கள்/கீரைகளால் அலங்கரிப்பது...
சாட்
(Saute)
எண்ணெயில் வதக்குதல்...
நீட் (ரிஸீமீணீபீ)
தண்ணீர் சேர்த்து பிசைதல்... பிரெட்டுக்கு மாவு பிசைதல்...
அ-க்ராடின் (Augratin)
உணவு வகைகளை சாஸ், சீஸ் கொண்டு மூடி பேக்கிங் செய்வது...
பிளாஞ்சிங் (Blanching)
காய்/பழங்களை வெந்நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுப்பதால் அதன் நிறம் மாறாமல் இருக்கும். சாலட்களில் இவை சுவை கூட்டும்.
மாரினேட் (Marinate)
மசாலாவில் ஊற
வைப்பது...
டீப் ஃப்ரை
(Deep Fry)
அதிக அளவு எண்ணெயில் பொரிப்பது...
ட்ரெட்ஜ் (Dredge)
மாவினால் உணவுப்
பொருட்களை கவர் செய்தல்...
மின்ஸிங் (Mincing)
காய்களை பெரிய துண்டிலிருந்து மிக பொடியாக நறுக்குதல்...
டஸ்ட் (Dust)
கேக் போன்றவை செய்யும் போது ஒட்டாமல் வர கேக் ட்ரேவில் மைதா தூவுதல்...
கட் அண்ட் போல்ட்
(Cut and Bold)
அழுத்தி, கைகளை உபயோகித்து பிசையாமல் கரண்டி அல்லது கத்தியால் சீராக கலப்பது...
ஷாலோ ஃப்ரை (Shallow Fry)
அளவு குறைந்த எண்ணெயில் பொரிப்பது...