Author Topic: ~ சமையலறை எவ்வாறு இருக்க வேண்டும்? ~  (Read 661 times)

Online MysteRy

சமையலறை எவ்வாறு இருக்க வேண்டும்?




பொதுவாக ஒரு சமையலறையை அமைக்கும்போது எப்படியெல்லாம் அமைக்க வேண்டும் என்று கல்லூரியில் ஹோம் சயின்ஸ் படிக்கும்போது சொல்லித் தருவார்கள்.

சமையலறை எல் போன்ற வடிவம், அல்லது யு வடிவம் இப்படி இரண்டில் ஒரு வடிவில்தான் சமையலறை அமைக்கப்படும்.

இது இரண்டுமில்லாமல் மூன்றாவதாக இணையான வடிவில் அமைக்கப்படுவதும் உண்டு. இந்த பேரலல் வடிவில் இரண்டு மேடைகள் இருப்பதுபோல அமைக்கப்படும். சிலசமயம் ஒரே மேடை மட்டும் அமைக்கப்படும். இடம் சிறியது என்றால் அதில் யு அல்லது எல் வடிவில் அமைப்பதுதான் சிறந்தது.

சமையலறையில் மேடை சிறிது நீளமாகவும், அகலமாவும், உயரம் குறைந்ததாகவும் இருப்பது மிகவும் நல்லது.

உயரமான சமையலறை சமைப்பவரை விரைவில் களைப்பாக்கும் என்பதை உணருங்கள். அவ்வாறு உயரமாக இருந்தால் நிற்கும் இடத்தில் சிமண்டாலோ அல்லது மரத்தாலோ உயரத்தைக் கூட்டிக் கொள்வது நல்லது.