என்னென்ன தேவை?
ஸ்வீட் பிரெட் சிறிய பாக்கெட் - 1,
சர்க்கரை - 1/4 கிலோ,
பால் 1/2 லிட்டர்,
நெய் - 2 டீஸ்பூன்,
முந்திரி - அலங்கரிக்க,
ஃபுட் கலர் - சிறிது.
எப்படிச் செய்வது?
அடுப்பில் மிதமான தீயில் பாலை வைத்து பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறவும். பிரெட் வெந்த பதத்துக்கு வந்தவுடன் சர்க்கரையைப் போட்டு கிளறி, நெய் விட்டு, ஃபுட் கலர் போட்டுக் கிளறி இறக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.