Author Topic: முளைகட்டிய நவதானிய சூப்  (Read 416 times)

Offline kanmani

முளைகட்டிய நவதானிய சூப்
« on: September 06, 2013, 04:33:45 AM »
தேவையானவை:

முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பூண்டு – 2 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் – அரை கப், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.