Author Topic: க்ளியர் சூப்  (Read 360 times)

Offline kanmani

க்ளியர் சூப்
« on: September 06, 2013, 04:32:36 AM »
தேவையானவை:

வெங்காயம், கேரட் – தலா ஒன்று, செலரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – சிறிதளவு, முட்டை – ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி – பூண்டு – ஒரு டீஸ்பூன், வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

முட்டையை உடைத்து வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீர், நறுக்கிய வெங்காயம், கேரட், இஞ்சி – பூண்டு, முட்டை – வினிகர் கலவை, உப்பு எல்லாம் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து கரண்டியால் கிளறாமல் கொதிக்க வைத்து… பிறகு மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். காய்கறி, முட்டை வெந்து மேலே வரும்போது இறக்கி, சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும். விருப்பப்பட்டால் வடிகட்டியும் பரிமாறலாம்.