Author Topic: பப்பாளி இஞ்சி சூப்  (Read 466 times)

Offline kanmani

பப்பாளி இஞ்சி சூப்
« on: September 06, 2013, 04:32:05 AM »
தேவையானவை:

பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் – சிறிதளவு. உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கடாயில் எண்ணெயை சூடாக்கி… வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி… சூப் கப்பில் ஊற்றவும். அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.