Author Topic: மேன்சௌ சூப்  (Read 401 times)

Offline kanmani

மேன்சௌ சூப்
« on: September 06, 2013, 04:30:46 AM »
தேவையானவை:

பீன்ஸ் – 5, கேரட், வெங்காயம், குடமிளகாய் – தலா ஒன்று, கோஸ் – 100 கிராம், பேபி கார்ன் – 2, வெங்காயத்தாள் – சிறிதளவு, வினிகர், தக்காளி சாஸ், சோள மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – காரத்துகேற்ப, அஜினமோட்டோ – சிறிதளவு, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், சில்லி பேஸ்ட் – காரத்துக்கேற்ப, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அதில் சில்லி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, உப்பு, மிளகுதூள் சேர்த்துக் கலந்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி, நன்கு கொதித்தவுடன் இறக்கி… மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

குறிப்பு: சில்லி பேஸ்ட் தயாரிக்க… வெங்காயம் ஒன்று, பூண்டு ஒரு பல், தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த காய்ந்த மிளகாய் ஐந்து, புளி நெல்லிக் காய் அளவு எடுத்து… தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்