தேவையானவை:
ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒன்று, உதிர்த்த ஸ்வீட் கார்ன் – ஒரு கப், பூண்டு – 2 பல், காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
ஆவகாடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும். மிக்ஸியில்… ஆவகாடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதில் அரைத்த ஆவகாடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து… அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி… பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
குறிப்பு: ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும்