Author Topic: மூங்கில் ரைஸ் வெஜ் சூப்  (Read 673 times)

Offline kanmani

மூங்கில் ரைஸ் வெஜ் சூப்
« on: September 05, 2013, 09:50:16 PM »
தேவையானவை:

மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) – ஒரு கப், கேரட் – ஒன்று (நறுக்கவும்), வேக வைத்த பட்டாணி – ஒரு கப், பீன்ஸ் – 5 (நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 2 பல், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

மூங்கில் ரைஸில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
கடாயில் வெண்ணெயை காயவைத்து… பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் ரைஸை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.