Author Topic: ஃபிரெஞ்சு ஆனியன் சூப்  (Read 434 times)

Offline kanmani

ஃபிரெஞ்சு ஆனியன் சூப்
« on: September 05, 2013, 09:46:06 PM »
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 4, வெண்ணெய் – 50 கிராம், வெள்ளை வெங்காயம் – 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் – 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர், சர்க்கரை – சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
செய்முறை:‘மைக்ரோவேவ் அவன்’-ஐ ‘ப்ரி-ஹீட்’ செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
குறிப்பு: ‘மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.
காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி – தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு – 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை – ஒன்று, தைம் இலை – ஒரு டீஸ்பூன், பாஸில் இலை – ஒரு டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், லவங்கம் – 2, பட்டை – ஒன்று, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 – 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.