Author Topic: கோதுமை ரவை பாயாசம்  (Read 453 times)

Offline kanmani

கோதுமை ரவை பாயாசம்
« on: September 04, 2013, 10:09:08 PM »
தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் (தட்டியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
பாதாம் - 10 தண்ணீர் - 3 கப்
முந்திரி - 2-3 (நெய்யில் வறுத்தது)

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையைப் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம், தேங்காய் மற்றும் பாதாமை மிக்ஸியில் போட்டு, ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வேக வைத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும், அதில் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

வெல்லமானது கரைந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பாதாமை போட்டு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் முந்திரியை தூவினால், சூப்பரான கோதுமை ரவை பாயாசம் ரெடி!!!